Theme Check

17 வயது சிறுமியை ஒரு வருடமாக சீரழித்த 6 கொடூரர்கள்!!

17 வயது சிறுமியை ஒரு வருடமாக சீரழித்த 6 கொடூரர்கள்!!

17 வயது சிறுமியை ஒரு வருடமாக சீரழித்த 6 கொடூரர்கள்!!
X

வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி ஒரு வருடமாக 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆறு பேரை போலீஸார் கைது செய்தனர்.

இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் உள்ள மருத்துவமனைக்கு 17 வயது சிறுமி ஒருவர் அண்மையில் தீவிர வயிற்று வலி காரணமாக சென்றார். அப்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மருத்துவர்கள் தகவல் அளித்தனர். பின்னர் அந்த அதிகாரிகள் சிறுமிக்கு உரிய மனநல ஆலோசனை வழங்கி எப்படி கருவுற்றார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

rape

அப்போது சிறுமி கூறியதை கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியின் தந்தை பிரிந்து சென்றதால் அச்சிறுமியும், அவரது தாயார் மட்டுமே தனியாக வசித்து வருகிறார்கள்.

இதனால் குடும்பத்தை தாயாரையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என சிறுமி வேலைக்கு செல்ல முயன்றார். இதனையறிந்த குமாரமங்கலத்தைச் சேர்ந்த பேபி ரகு என்ற நபர் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி சிறுமியை வெளியே அழைத்துச் சென்றார்.

abuse

இதற்காக பணத்தை பெற்றுக் கொண்ட பேபி ரகு தொடுபுழாவைச் சேர்ந்த தங்கச்சனிடம் சிறுமியை அறிமுகப்படுத்தி அவர் வேலை தருவார் எனக் கூறியிருக்கிறார். இதையடுத்து சிறுமியை தங்கச்சன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இப்படி வேலை தருவதாச் சொல்லி பல்வேறு இடங்களில் சிறுமி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். இவ்வாறு 15 பேர் சிறுமியை சீரழித்திருக்கிறார்கள். சிறுமியின் வாக்குமூலத்தை அடுத்து போலீஸார் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

kl rape

அதன்படி தொடுபுழா தங்கச்சன், கூடிக்குளம் சாக்கோ, எடவெட்டி பினு, வெள்ளரம்குன்னு சஜீவ், ராமாபுரத்தைச் சேர்ந்த தங்கச்சன், பெரிந்தலமன்னா ஜான்சன் ஆகிய 6 பேரை போலீஸார் முதற்கட்டமாக கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய எஞ்சிய 9 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it