Theme Check

ஆற்றில் குளித்தப்போது நண்பனை காப்பாற்றும் முயற்சியில் 6 பேர் உயிரிழப்பு !!

ஆற்றில் குளித்தப்போது நண்பனை காப்பாற்றும் முயற்சியில் 6 பேர் உயிரிழப்பு !!

ஆற்றில் குளித்தப்போது நண்பனை காப்பாற்றும் முயற்சியில் 6 பேர் உயிரிழப்பு !!
X

குளிக்க சென்றபோது நீரில் மூழ்கிய நண்பர்களை காப்பாற்ற சென்று அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கி 6 பேர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டு உள்ளது.

ஒடிசாவின் ஜஜ்பூர் நகரில் கரஸ்ரோட்டா பகுதியில் அப்பகுதி இளைஞர்கள், இளம்பெண்கள் ஏராளமானோர் பெரும் உற்சாகத்துடன் ஹோலி பண்டிகையை கொண்டாடினர். ஹோலி கொண்டாட்டம் முடிந்தபின்னர் இளைஞர்கள் பலரும் அப்பகுயில் ஓடும் ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.

death

ஆற்றின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நண்பர்கள் சிலர் சென்றுள்ளனர். அவர்களில் ஒருவர் திடீரென ஆற்றில் மூழ்கியுள்ளார். இதனை கவனித்த அருகில் இருந்த மற்றொருவர் அவரை காப்பாற்ற சென்றிருக்கிறார். இதில் அவரும் நீருக்குள் மூழ்கி உள்ளார். இதுபோன்று தங்களுடைய நண்பர்களை காப்பாற்றுவதற்காக அடுத்தடுத்து 6 பேர் சென்று அவர்கள் அனைவரும் ஆற்றில் மூழ்கி உள்ளனர்.

death

இதுபற்றி தகவல் அறிந்து, உள்ளூர்வாசிகள் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்றுள்ளனர். அவர்களில் சிலர் ஆற்றில் நீந்தி சென்று, ஒருவரது உடலை மீட்டனர். சம்பவம் பற்றி ஒடிசா தீயணைப்பு துறை மற்றும் பேரிடர் அதிரடி விரைவு படைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், 3 பேரின் உடல் கிடைக்காததால் இன்றும் தேடும் பணி நீடித்து வருகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it