Theme Check

சேலத்தில் பரபரப்பு.. கைக்குழந்தையுடன் 6 பேர் தீக்குளிக்க முயற்சி..!

சேலத்தில் பரபரப்பு.. கைக்குழந்தையுடன் 6 பேர் தீக்குளிக்க முயற்சி..!

சேலத்தில் பரபரப்பு.. கைக்குழந்தையுடன் 6 பேர் தீக்குளிக்க முயற்சி..!
X

சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த சந்தியா உள்பட 6 பேர் கைக் குழந்தையுடன் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு, தாங்கள் மறைத்து எடுத்து வந்திருந்த மண்ணெண்ணையை திடீரென உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதைப்பார்த்த அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து அவர்களை மீட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் கூறுகையில், ‘நாங்கள் உள்பட 20 குடும்பத்தினர் மேச்சேரி அருகே உள்ள குக்கல்பட்டி காட்டுவளைவு பகுதியில் வசித்து வருகிறோம்.

அங்குள்ள வெள்ளையன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பொதுப் பாதையில் ஒரு பகுதியை ஆக்கிரமித்ததுடன் மற்றொரு பகுதியை விலைக்கு வாங்கி உள்ளனர். இதனால் நாங்கள் வீட்டில் இருந்து வெளியில் வர முடியவில்லை.

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்த போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தினமும் குடிபோதையில் எங்களை மிரட்டுகிறார்கள்.

இந்நிலையில் நேற்று, சந்தியாவின் ஓட்டு வீட்டை தீ வைத்து எரித்து விட்டனர். வீட்டில் இருந்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

எனவே, அந்தப் பாதையை பொதுப்பாதையாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். மேலும், வீட்டுக்கு தீ வைத்த ராஜன் பாபு, சுப்பராயன் உள்பட 4 பேர் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

சேலம் கலெக்டர் அலுவலகத்தில், கைக்குழந்தையுடன் 6 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story
Share it