Theme Check

இன்று 60% பேருந்துகள் இயங்கும் : தொ.மு.ச அறிவிப்பு!!

இன்று 60% பேருந்துகள் இயங்கும் : தொ.மு.ச அறிவிப்பு!!

இன்று 60% பேருந்துகள் இயங்கும் : தொ.மு.ச அறிவிப்பு!!
X

தமிழகத்தில் இன்று 60% பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தொ.மு.சா பொருளாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதலை கைவிடுதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் நேற்றும், இன்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

முக்கிய தொழிற்சங்கங்களான INTUC, AITUC, HMS, CITU, AIUTUC, TUCC, SEWA, AICCTU, LPF மற்றும் UTUC தொழிற்சங்கங்கள் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் நேற்று நாடு முழுவதும் பல்வேறு இடங்கள் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

bandh

தமிழகத்தில் தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி உட்பட 11 தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆனாலும் தொழிலாளர்கள் சம்பளத்தை இழந்தாலும் பரவாயில்லை, கட்டாயம் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தொழிற்சங்கங்கள் அறிவித்து ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

தமிழகத்தில் நேற்று 32 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை. சென்னையில் 90 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை இன்று வேலை நிறுத்தம் தொடரும் நிலையில், போதிய அளவில் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிகை வைக்கப்பட்டது.

bandh

இதையடுத்து இன்று 60 சதவீத பேருந்துகளை இயக்க வாய்ப்பு இருப்பதாக தொ.மு. பொருளாளர் நடராஜன் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நலன் கருதி, இன்று முன்னணி தோழர்கள் மட்டும் பங்குபெறும் வேலை நிறுத்தம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it