விளம்பர மாடலாக மாறிய 60 வயது கூலித் தொழிலாளி.. இளைஞருக்கு குவியும் வாழ்த்து !!
விளம்பர மாடலாக மாறிய 60 வயது கூலித் தொழிலாளி.. இளைஞருக்கு குவியும் வாழ்த்து !!

கேரளத்தில் 60 வயது கூலித் தொழிலாளி ஒருவர் விளம்பர மாடலாக மாறியுள்ள நிகழ்வு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு காரணமான இளைஞருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
தினமும் சாலையில் அழுக்கு உடை, உழைப்பின் வியர்வை, சோகமான உடல் மொழியுடன், கலைந்த தலையுடன் சென்ற முதியவரின், புதிய தோற்ற புகைப்படங்களை பார்த்த மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். அடடே அமிதாப் பச்சான் போல உள்ளாரே என வியக்கும் அளவுக்கு உள்ளது.கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கூலித்தொழில் செய்து வருபவர் மம்மிக்கா. 60 வயதான இவர் லுங்கி, சட்டை அணிந்து சாதாரண மனிதராக வலம் வந்துகொண்டிருந்தார். தினக் கூலிக்காக அன்றாடம் பணிக்குச் செல்வது மட்டுமே அவரது பணியாக இருந்து வந்த நிலையில், இவரைக் கண்ட ஷரிக் வயாலில் என்ற புகைப்படக் கலைஞர் அவரை புகைப்படம் எடுக்க அணுகியுள்ளார்.

முதலில் முதியவர் ஆச்சரியத்துடன் கேட்டார்.. நானா!! என்று.. அதற்கு இந்த புகைப்பட கலைஞரும், நீங்கள் வாருங்கள்.. நாங்களே ஆடை தந்து, உங்களை மாற்றுகிறோம் என அழைத்தார். எதுவும் புரியாமல் முதியவரும் ஒப்புக்கொண்டார்.
அதன்பின்னர், அவருடைய சாதாரண உடைகளுக்கு பதில், நேர்த்தியான உடையை உடுத்த வைத்து புகைப்படங்களை எடுத்துள்ளார். அதனைத் தனது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் பகிந்துள்ளார். இதனை பார்த்து அந்த முதியவரே ஆனந்த கண்ணீர் விட்டுள்ளார்.
ஷரிக் வயாலில் என்ற புகைப்படக் கலைஞர், கூலித் தொழிலாளியை மாடலாக மாற்றி எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
newstm.in

