Theme Check

6,000 அடி உயரம்.. ஊஞ்சல் ஆடிய பெண்களுக்கு நடந்த பகீர் சம்பவம்.. வைரல் வீடியோ !!

6,000 அடி உயரம்.. ஊஞ்சல் ஆடிய பெண்களுக்கு நடந்த பகீர் சம்பவம்.. வைரல் வீடியோ !!

6,000 அடி உயரம்.. ஊஞ்சல் ஆடிய பெண்களுக்கு நடந்த பகீர் சம்பவம்.. வைரல் வீடியோ !!
X

ரஷ்யாவின் தஜகெஸ்தானில் உள்ள சுலக் பள்ளத்தாக்கு 6,300 அடி உயரம் கொண்டது. சர்வதேச சுற்றுலா பயணிகளால் அதிகம் ஈர்க்கப்பட்ட பகுதி இதுவாகும். இந்த பள்ளத்தாக்கின் விளிம்பில் சங்கிலியால் ஆன‌ ஊஞ்சல் அமைத்துள்ளனர். ஆபத்தான அந்த ஊஞ்சலில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து உற்சாகமாக ஆடுவார்கள்.

அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு சுலக் பள்ளத்தாக்கு பகுதிக்கு சிலர் குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளனர். அவர்களில் 2 இளம்பெண்கள் ஊஞ்சலில் ஆடியுள்ளனர். அப்போது பின்னால் இருந்து இளைஞர் ஒருவர் ஊஞ்சலை தள்ளி விடுகிறார். ஊஞ்சல் பள்ளத்தாக்கில் சென்று ஆடி திரும்பியது. இதனால் அவர்களுடன் சென்றவர்கள் உற்சாகத்தில் சத்தம்போட் கொண்டாடினர். தங்கள் செல்போனிலும் வீடியோ எடுத்துக்கொண்டனர்.

இந்தநிலையில், மீண்டும் ஆடியப்போது திடீரென ஊஞ்சலின் இரும்பு சங்கிலி அறுந்ததால், அதில் அமர்ந்திருந்த 2 பெண்கள் பள்ளத்தாக்கில் விழுந்தனர். இதை கண்டு அங்கிருந்தவர்கள் அலறினர். ஆனால், அதிர்ஷ்டவசமாக கீழே விழுந்த 2 பெண்களும் அங்கிருந்த பள்ளத்தின் பக்கவாட்டில் விழுந்து கிடந்தனர். அவர்கள் சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

இது தொடர்பான வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை அவர்கள் பள்ளத்தாக்கில் விழுந்திருந்தால் அவர்களை மீட்க வாய்ப்பே இல்லை என கூறலாம். இச்சம்பவம் குறித்து அந்நாட்டில் உள்ள சுற்றுலாத்துறை விசாரணை நடத்தி வருகிறது.


newstm.in

Tags:
Next Story
Share it