Theme Check

2 மாதங்களில் 645 குழந்தைகள் பெற்றோரை இழந்தனர் !!

2 மாதங்களில் 645 குழந்தைகள் பெற்றோரை இழந்தனர் !!

2 மாதங்களில் 645 குழந்தைகள் பெற்றோரை இழந்தனர் !!
X

கொரோனா தாக்கம் காரணமாக 2ஆவது அலையில் மட்டும் 645 குழந்தைகள் பெற்றோரை இழந்து தவித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, இந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களில் 645 குழந்தைகள், கொரோனாவுக்கு தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 158 குழந்தைகள் பெற்றோர்களை இழந்தனர்.

smriti-irani

அடுத்ததாக, ஆந்திராவில் 119, மகாராஷ்டிரத்தில் 83, மத்திய பிரதேசத்தில் 73 குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்திருக்கிறார்கள்.

இந்த குழந்தைகள் கல்வியைத் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் எங்கள் அமைச்சகத்தையும், கல்வி அமைச்சகத்தையும் கேட்டுள்ளன. மேலும் இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவு அளிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணமாக ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

newstm.in

Tags:
Next Story
Share it