Theme Check

ஒரு இரவு தங்க 6.5 லட்சம் ரூபாய்..! : எங்கே தெரியுமா..?

ஒரு இரவு தங்க 6.5 லட்சம் ரூபாய்..! : எங்கே தெரியுமா..?

ஒரு இரவு தங்க 6.5 லட்சம் ரூபாய்..! : எங்கே தெரியுமா..?
X

ஷாங்காய் டவர் கட்டடத்தின் 120வது மாடியில், உலகின் மிக உயர்ந்த சொகுசு ஹோட்டலை அமைத்துள்ளனர். முன் கூட்டியே திறக்கப்பட இருந்த இந்த ஹோட்டல் கொரோனா பெருந்தொற்றால் காலதாமதமாகி தற்போது இதன் திறப்பு விழா நடந்துள்ளது.

துபாயின் புர்ஜ் கலீபாவுக்கு அடுத்தபடியாக உலகின் 2வது உயரமான கட்டடம் ஷாங்காய் நகரில் அமைந்துள்ள ஷாங்காய் டவர் ஆகும். சுமார் 2 ஆயிரம் அடி உயரம் கொண்ட இந்தக் கட்டடத்தின் மேல் தளங்களில் ஜெ ஹோட்டல்ஸ் என்ற நிறுவனம் தங்கும் விடுதி, உணவு விடுதி, நீச்சல் குளம், ஸ்பா, பார் போன்றவற்றை அமைத்துள்ளது.



இந்த சொகுசு ஹோட்டலை சீன அரசுக்கு சொந்தமான ஜின் ஜியாங் இன்டர்நேஷனல் ஹோட்டல்ஸ் குழு அமைத்துள்ளது. முழுக்க முழுக்க வசதிபடைத்தவர்களுக்கான ஹோட்டலாக வடிவமைத்துள்ளனர். திறப்பு விழா சலுகையாக ஒரு இரவு தங்க ரூ.35 ஆயிரம் என அறிவித்தனர்.

அதிலுள்ள பிரமாண்ட சூட் அறைகளுக்கு கடும் டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் அந்த சூட் அறைகளில் தங்க ஒரு இரவுக்கு ரூ.6.5 லட்சம் கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.

Tags:
Next Story
Share it