6.5 லட்சம் மாணவர்கள் ஆப்சென்ட்.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!
6.5 லட்சம் மாணவர்கள் ஆப்சென்ட்.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத 6.5 லட்சம் மாணவர்களை கண்டறிந்து உடனடித் தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு கடந்த மே மாதம் 5-ம் தேதி தொடங்கிய பொதுத்தேர்வுகள் 31-ம் தேதி வரை நடைபெற்றது. 10, 11, 12-ம் வகுப்பு வரை சேர்த்து மொத்தம் 27 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இதில், 12-ம் வகுப்பு தேர்வுகளில் 1,95,292 மாணவர்கள், 11-ம் வகுப்பு தேர்வில் 2,58,641 மாணவர்கள், 10-ம் வகுப்பு தேர்வில் 2,25,534 மாணவர்கள் என மொத்தமாக 6,49,467 மாணவர்கள் தேர்வு எழுத வராதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அந்த மாணவர்களை கண்டறிந்து ஜூலையில் நடைபெறும் உடனடித் தேர்வுகளில் பங்கேற்க வைக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, அதற்கான செயல் திட்டத்தை தயார் செய்யுமாறு அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் வாட்ஸ் அப் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

