Theme Check

25 வயதை கரம் பிடித்த 65 வயது.. திருமணமான 5 மாதத்தில் தற்கொலை..!

25 வயதை கரம் பிடித்த 65 வயது.. திருமணமான 5 மாதத்தில் தற்கொலை..!

25 வயதை கரம் பிடித்த 65 வயது.. திருமணமான 5 மாதத்தில் தற்கொலை..!
X

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் குனிகல் தாலுகா ஹிலியூர்துர்கா அருகே சவுடனகுப்பே கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரண்ணா (65).

விவசாயியான இவர் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம், கணவரால் கைவிடப்பட்ட மேகனா (25) என்ற இளம்பெண்ணை உறவினர்கள் முன்னிலையில் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து, 65 வயது முதியவர், 25 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது. மேலும், சங்கரண்ணா - மேகனா திருமண புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின.
65 வயதில் 25 வயது இளம்பெண்ணை காதலித்து திருமணம் !! பின்னணியில் இப்படி ஒரு  காரணமா ?? ஒட்டுமொத்த இந்தியாவும் திரும்பிப்பார்த்த காதல் ஜோடி ...
திருமணம் முடிந்த பின்னர் சங்கரண்ணாவும், மேகனாவும் சந்தோஷமாக வாழ்ந்துள்ளனர். மேகனா தற்போது 4 மாத கர்ப்பமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக மேகனாவுக்கும், சங்கரண்ணாவின் தாய்க்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் மேகனா, மைசூரு அல்லது பெங்களூருவுக்கு சென்று தனிக்குடித்தனம் நடத்தலாம் என்று சங்கரண்ணாவிடம் கூறியுள்ளார். ஆனால், தாயை பிரிந்து வர மாட்டேன் என்று சங்கரண்ணா கூறியதாக சொல்லப்படுகிறது.

இதுதொடர்பாக சங்கரண்ணா - மேகனா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. அதுபோல் நேற்று முன்தினம் கணவன் - மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட சங்கரண்ணா தற்கொலை செய்ய முடிவு செய்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியேறிய சங்கரண்ணா, அக்கிமிதிபாளையா என்ற கிராமத்தில் ஒரு மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அங்கு சென்ற மேகனாவும், சங்கரண்ணாவின் தாயும், சங்கரண்ணாவின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். பின்னர் அங்கு வந்த போலீசார் சங்கரண்ணாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், சங்கரண்ணா சாவுக்கு மேகனா தான் காரணம் என்றும், சங்கரண்ணாவை மேகனா தற்கொலைக்கு தூண்டியதாகவும் ஹிலியூர் துர்கா போலீஸ் நிலையத்தில் சங்கரண்ணாவின் தாய் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
Share it