Theme Check

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பெண்கள் உட்பட 7 பேர் கைது!!

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பெண்கள் உட்பட 7 பேர் கைது!!

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பெண்கள் உட்பட 7 பேர் கைது!!
X

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பெண் சாராய வியாபாரி உட்பட 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர், காமராஜர் நகர், இந்திரா நகர், லாலா ஏரி, உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அடியாட்களை வைத்து கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருகின்றனர்.

மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் சீனிவாசன், உறவினர்களான உஷா, தேவேந்திரன், சின்னராஜ், மோகன், மகேந்திரன், பழனி, சிரஞ்சீவி, நவீன், எலி சரவணன், செல்வி, உள்ளிட்ட மேலும் பலர் சாராயம் கஞ்சா போலி மதுபானம் விற்பனை செய்து வந்துள்ளனர்.

sarayam

அதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த சாராய கும்பலை சேர்ந்த 21 பேரை கைது செய்த காவல்துறையினர் முக்கிய குற்றவாளியான மகேஸ்வரி உள்ளிட்ட பலரை தேடி வந்தனர். இந்நிலையில் மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் சீனிவாசன் உட்பட 6 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தில் தங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் விரைந்து சென்ற தனிப்படை காவல் துறையினர் அங்கு பதுங்கியிருந்த மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் சீனிவாசன், உஷா, தேவேந்திரன், சின்னராஜ், மோகன் ஆகியோரை கைது செய்தனர்.

போலீசார், அவர்களை வாணியம்பாடி காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it