Theme Check

கோவில் திருவிழாவில் வெடி விபத்து.. 3 குழந்தைகள் உட்பட 7 பேர் காயம்..!

கோவில் திருவிழாவில் வெடி விபத்து.. 3 குழந்தைகள் உட்பட 7 பேர் காயம்..!

கோவில் திருவிழாவில் வெடி விபத்து.. 3 குழந்தைகள் உட்பட 7 பேர் காயம்..!
X

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கள்ளிக்குடி மாரியம்மன் கோவில் திருவிழா அதி விமரிசையாக கரகம் பாலித்து நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது, திருவிழாவில் வானவேடிக்கை நடைபெற்றது. இதில் எண்ணற்ற வகையான வெடிகள் வெடித்தனர். வெடிகள் வெடித்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக பொதுமக்கள் கூடியிருந்த கூட்டத்திற்குள் வெடிகள் வெடித்துச் சிதறியது. இதில், 3 குழந்தைகள் உட்பட 7 பேர் காயம் அடைந்தனர்.

உடனடியாக அனைவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து மணப்பாறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story
Share it