Theme Check

மொத்த வியாபாரியிடம் இருந்து 7 கிலோ தங்க நகை கொள்ளை!?

மொத்த வியாபாரியிடம் இருந்து 7 கிலோ தங்க நகை கொள்ளை!?

மொத்த வியாபாரியிடம் இருந்து 7 கிலோ தங்க நகை கொள்ளை!?
X

தஞ்சாவூரில் மொத்த நகை வியாபாரியிடம் இருந்து சுமார் 7 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்ததாக புகார் எழுந்துள்ளது.

சென்னையை சேர்ந்த மொத்த நகை வியாபாரி மணி (52) என்பவர் தஞ்சையில் உள்ள நகைக்கடைகளுக்கு நகைளை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். அந்த வகையில் இவர் சென்னையிலிருந்து தஞ்சைக்கு வந்து நகை கடைகளுக்கு நகைகளை கொடுத்துள்ளார்.

பின்னர் இரவு டிபன் சாப்பிடுவதற்காக தஞ்சை பழைய பஸ்ஸ்டாண்டில் உள்ள ஒரு உணவகத்திற்கு சென்றதாகவும். அங்கு நகைகள் அடங்கிய பையை கீழே வைத்து விட்டு சாப்பிட்ட டிபனுக்கு பணம் கொடுத்த போது, அவரை சுற்றி ஒரே நிறத்தில் சீருடை அணிந்த 9 பேர் வந்து நின்றதாக கூறப்படுகிறது.

gold

பணத்தை கொடுத்துவிட்டு பார்த்த போது, கீழே வைத்திருந்த நகைப்பையை காணவில்லை என்றும், மேலும் அவரை சுற்றி ஒரே நிறத்தில் சீருடை அணிந்து நின்றிருந்தவர்களையும் காணவில்லை என்று தெரிவித்துள்ளார். அந்த பையில் சுமார் 7 கிலோ நகைகள் இருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து தஞ்சை மேற்கு போலீசில் மணி புகார் செய்தார். இதன் பேரில் மேற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சீருடை அணிந்து நின்றிருந்தவர்கள் நூதன முறையில் மணியிடம் இருந்து நகைப்பையை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த சம்பவம் உண்மைதானா என்பது குறித்தும் விசாரணை செய்வதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

newstm.in

Next Story
Share it