Theme Check

பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு!!

பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு!!

பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு!!
X

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதியில் இருந்து 25 கி.மீட்டர் தொலைவில் உள்ள பக்ரபேடா என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்த போது விபத்து நிகழ்ந்தது. இரவு என்பதால், பயணிகள் தூங்கி கொண்டிருந்தனர்.

இதனால் தப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அலறி அடித்துக் கொண்டு பயணிகள் தப்பிக்க முயற்சி செய்தனர்.

ap acc

அவ்வழியாக சென்ற பிற வாகன ஓட்டிகள் தகவல் தெரிவித்ததையடுத்து, நிகழ்விடத்திற்கு மீட்புக்குழு விரைந்து வந்தது. இந்த பயங்கர விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

45 பேர் காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓட்டுநரின் அலட்சியமே விபத்துக்கு காரணம் என்று திருப்பதி காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it