Theme Check

மேம்பாலத்தில் இருந்து பாய்ந்த பேருந்து.. 7 பேர் பலி.. பலர் நிலைமை மோசம் !!

மேம்பாலத்தில் இருந்து பாய்ந்த பேருந்து.. 7 பேர் பலி.. பலர் நிலைமை மோசம் !!

மேம்பாலத்தில் இருந்து பாய்ந்த பேருந்து.. 7 பேர் பலி.. பலர் நிலைமை மோசம் !!
X

தாறுமாறாக ஓடிய பேருந்து மேம்பாலத்தில் இருந்து கீழே பாய்ந்ததில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் கிழக்கு சக்வால் மாவட்டத்தில் கராச்சி நோக்கி நேற்று இரவு ஒரு பேருந்து சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தில் 35-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.

பஞ்சாப் மாகாணத்தின் கான்வால் மாவட்டத்தில் உள்ள மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது பேருந்தின் டயர் திடீரென வெடித்தது. இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. மேலும், அச்சாலையில் இருந்த மேம்பாலத்தில் வேகமாக ஓடிய பேருந்து கீழே கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

bus

இந்த கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 28 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் பலரின் நிலைமை மோசமாக இருப்பதாக கூறப்படும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in


Tags:
Next Story
Share it