Theme Check

மின்னல் தாக்கி ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு!!

மின்னல் தாக்கி ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு!!

மின்னல் தாக்கி ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு!!
X

கேரள கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழையின் போது மின்னல் தாக்கி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று ஒரே நாளில் மட்டும் 7 பேர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் கருப்பசாமி நகரில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தபோது சதீஷ் என்பவரின் வீட்டில் கட்டுமானப் பணியை மேற்கொண்டிருந்த ரோசல்பட்டியை சேர்ந்த கார்த்திக்ராஜா, முருகன், ஜக்கம்மா மற்றும் ஜெயசூர்யா ஆகிய நால்வர் மின்னல் தாக்கி உடல் கருகி பலியாகினர்.

minnal

கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதி கிராம ஏரியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஜெயக்கொடி மீது மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜெயக்கொடியின் நான்கு ஆடுகளும் மின்னல் தாக்கி உயிரிழந்தன.

திருவதிகை கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் வேலை பார்த்து வந்த அபர்நாத் என்ற 23 வயது இளைஞர் பலத்த காயமுற்றார்.

minnal

ராணிப்பேட்டை மாவட்டம் கரிவேடு பகுதியில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்காக மரத்தின் நிழலில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது மின்னல் தாக்கியதில், குணசேகரன் என்பவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு இளைஞர் தீபன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

newstm.in

Next Story
Share it