Theme Check

சொகுசு பேருந்து எரிந்து 7 பேர் உடல் கருகி பலி!!

சொகுசு பேருந்து எரிந்து 7 பேர் உடல் கருகி பலி!!

சொகுசு பேருந்து எரிந்து 7 பேர் உடல் கருகி பலி!!
X

கர்நாடகாவில் சொகுசு பேருந்து தீ பிடித்து எரிந்த விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவாவிலிருந்து ஹைதராபாத்தை நோக்கி சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 35க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். பேருந்து கர்நாடக மாநிலம், கல்புர்கி மாவட்டத்திற்குட்பட்ட கமலாபூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிரே வந்த லாரி மீது பேருந்து மோதியது. விபத்தில் பேருந்து சாலையில் கவிழ்ந்து திடீரென தீ பிடித்தது. இதனால் பேருந்து உள்ளே இருந்தவர்கள் வெளியே வரமுடியாமல் தீயில் சிக்கினர்.

ka bus fire

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் பேருந்தில் சிக்கியவர்களை மீட்டனர். அப்போது 7 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

தீ காயம் அடைந்தவர்களை மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it