Theme Check

சூனியம் இருப்பதாக பொறியாளரிடம் 7 லட்சம் சுருட்டிய பெண் ஜோதிடர்!!

சூனியம் இருப்பதாக பொறியாளரிடம் 7 லட்சம் சுருட்டிய பெண் ஜோதிடர்!!

சூனியம் இருப்பதாக பொறியாளரிடம் 7 லட்சம் சுருட்டிய பெண் ஜோதிடர்!!
X

வீட்டில் சூனியம் இருப்பதாக கூறி ரூ.7 லட்சம் பணத்தை ஏமாற்றிய பெண் ஜோதிடரை போலீசார் தேடிவருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் சின்ச்வாத் பகுதியைச் சேர்ந்த 52 வயது பொறியாளர் ஒருவர் பன்னாட்டு உற்பத்தி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். ஜோதிடம், மாந்திரீகத்தில் நம்பிக்கையுள்ள அவர், பெண் ஜோதிடரை ஒருவரை ஆன்லைனில் சந்தித்தார்.

ஜோதிடரின் பேச்சில் மயங்கிய பொறியாளரின் குடும்பம் தங்களுடைய குடும்ப கஷ்டங்களை அவரிடம் கொட்டித் தீர்த்தனர். அவர்களிடம் பணம் இருப்பதை தெரிந்து கொண்ட பெண் ஜோதிடர் அவருடைய வீட்டிற்கு யாரோ சூனியம் வைத்திருப்பதாகவும், அதனால்தான் வீட்டில் பிரச்னைகள் எழுவதாகவும் கூறியிருக்கிறார்.

money

தாம் சொல்லும் பரிகாரங்களையெல்லாம் செய்யாவிட்டால் வீட்டில் யாரேனும் இறந்துவிடுவர் என்றும் பயமுறுத்தி இருக்கிறார். ஜோதிடரின் பேச்சை நம்பிய பொறியாளரின் குடும்பம் சூனியத்தை எடுக்க அவர் கேட்ட ரூ.7.21 லட்சம் பணத்தை பல தவணைகளாக அனுப்பினர்.

பணத்தை பெற்றுக்கொண்ட பெண் ஜோதிடர் பொறியாளர் குடும்பத்தின் தொடர்பை துண்டித்துவிட்டார். அதன்பிறகு பெண் ஜோதிடர் போலி என்று தெரியவந்தது. இதுகுறித்து சின்ச்வாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து போலி பெண் ஜோதிடரை தேடிவருகின்றனர்.

newstm.in

Next Story
Share it