Theme Check

பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் பனிச்சரிவில் சிக்கி மாயம்.. தேடுதல் பணி தீவிரம்..!

பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் பனிச்சரிவில் சிக்கி மாயம்.. தேடுதல் பணி தீவிரம்..!

பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் பனிச்சரிவில் சிக்கி மாயம்.. தேடுதல் பணி தீவிரம்..!
X

அருணாச்சலப் பிரதேசத்தில், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை வீரர்கள் ஏழு பேர் பனிச்சரிவில் சிக்கி மாயமாகினர். அவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் கமெங் செக்டரில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. உயரமான மலையில் இருக்கும் அப்பகுதியில், பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு படை வீரர்கள் ஏழு பேர் பனிச்சரிவில் சிக்கினர். அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதற்காக சிறப்பு குழுவினர் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story
Share it