திருடிய நகைகளை கொடுத்து பெண்களுடன் உல்லாசம்- 70 வயது தாத்தாவின் லீலை !!
திருடிய நகைகளை கொடுத்து பெண்களுடன் உல்லாசம்- 70 வயது தாத்தாவின் லீலை !!

நகைகளை கொள்ளையடித்து அதனை கொடுத்து பெண்களிடம் உல்லாசமாக காலம்கழித்து வந்த 70 வயது முதியவரை தற்போது சிக்கியுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு நிமான்ஸ் லே-அவுட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நகை, பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவந்தனர். மேலும் திருட்டு நடந்த வீட்டின் முன்பு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அந்த காட்சிகளின் அடிப்படையில் வீட்டில் திருடியதாக முதியவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

அதாவது, கைதானவர் சிக்கமகளூருவை சேர்ந்த 70 வயதான ரமேஷ் என்பது தெரியவந்தது. ரமேசுக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்து உள்ளது. 3 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு ரமேஷ், 3ஆவதாக இளம்பெண் ஒருவரை திருமணம் செய்ய முயன்றுள்ளார். இதனை அறிந்த 2 மனைவிகள் மற்றும் பிள்ளைகள் சேர்ந்து ரமேசை வீட்டில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.
பின்னர் அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ரமேஷ் அங்கு பூட்டி கிடந்த வீடுகளை குறிவைத்து நகை, பணத்தை திருடி உள்ளார். திருடிய நகை, பணத்தை சில பெண்களிடம் கொடுத்து அவர்களுடன் உல்லாசமும் அனுபவித்து வந்து உள்ளார். திருட்டு வழக்குகளில் தமிழக போலீசாரால் 4 முறை கைது செய்யப்பட்ட ரமேஷ் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

பின்னர் இனி தமிழகத்தில் திருடக்கூடாது என முடிவெடுத்து பெங்களூருவுக்கு வந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுவந்துள்ளார். வழக்கம் போல் திருடிய நகைகளை பல பெண்களிடம் கொடுத்து அவர்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இந்த நிலையில், தற்போது ஒரு வீட்டில் கைவரிசை காட்டி சிக்கியுள்ளார். அவரிடம் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பிலான 162 கிராம் தங்கநகைகள் மற்றும் ரூ.5 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
newstm.in

