இனி முதியோருக்கு ரூபாய் 7,000! மத்திய அரசின் புது திட்டம்!!
இந்தியாவில் மொத்தம் 10.38 கோடி முதியோர்கள் இருப்பதாக 2011ம் ஆண்டு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. தனியாக வாழும் முதியோர்களை சிறப்பாக கவனித்துக் கொள்ளும் புதிய திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த இருக்கிறது..

இந்தியாவில் மொத்தம் 10.38 கோடி முதியோர்கள் இருப்பதாக 2011ம் ஆண்டு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. தனியாக வாழும் முதியோர்களை சிறப்பாக கவனித்துக் கொள்ளும் புதிய திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த இருக்கிறது.

புதிய சட்டத்தின் படி பகல் நேர பராமரிப்பு இல்லம் ஒன்று முதியோர்களுக்காக துவங்கப்படும். பகல் முழுவதும் முதியோர்கள் அந்த இல்லத்தில் பாதுகாப்புடன் பொழுதைக் கழிக்கலாம். மேலும் ஒவ்வொரு முதியவருக்கும் தலா ரூ7000/- மதிப்புள்ள சக்கரநாற்காலி, ஊன்றுகோல் வழங்கவும் ஆவண செய்யப்படும். அந்த இல்லங்களில் பொழுதைக் கழிக்க நூலகம், உணவு விடுதி என அனைத்து வசதிகளும் உடையதாக அமைக்கப்பட இருக்கிறது .

இது தவிர தொண்டு நிறுவனங்கள் மூலம் தனியாக வாழும் முதியோர்களை கவனித்துக் கொள்ளவும் மற்றொரு திட்டமும் மத்திய அரசால் விரைவில் கொண்டு வரப்படும் என மத்திய சமூக நீதித் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் மாநிலங்களவையில் அறிவித்திருக்கிறார்.
newstm.in

