72 வயது தாத்தா காதல் மனைவிக்காக கொடுத்த பரிசு.. உலகமே வியப்பு !! வைரல் வீடியோ
72 வயது தாத்தா காதல் மனைவிக்காக கொடுத்த பரிசு.. உலகமே வியப்பு !! வைரல் வீடியோ

ஐரோப்பாவில் உள்ள போஸ்னியா எர்செகோவினா நாட்டின் செர்பாக் நகர் அருகில் வோஜின் குசிக் (72) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி மீதான அன்பின் அடையாளமாக, அவருக்கு வித்தியாசமான வீட்டை கட்டிக்கொடுத்து சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளார்.

அப்படி என்ன வீடு கட்டினார் என்று கேட்கலாம். ஆம் அவர், தனது மனைவிக்காக சுழலும் வீட்டைக் கட்டி கொடுத்து அசத்தி உள்ளார். சூரியன் உதிப்பது முதல் மறைவது வரை வீட்டிற்குள் இருந்தபடியே இயற்கையைக் கண்டு களிக்கும்வகையில், தன் மனைவிக்கு தொழில்நுட்பத்துடன் இந்த புதுமையான வீட்டை பரிசளித்துள்ளார் வோஜின் குசிக்.
இந்த வீட்டின் சுழலும் வேகத்தை தேவைக்கேற்ப மாற்றியமைத்துக்கொள்ள முடியும். மிகவும் வேகமாக சுழன்றால், 22 வினாடிகளில் ஒரு முறை முழுமையாக சுற்றி முடிக்கும். மிகவும் மெதுவான வேகத்தில் சுழன்றால் ஒரு சுழற்சியை முடிக்க 24 மணி நேரம் ஆகும்.

இதில் சிறப்பு என்னவென்றால், யாருடைய துணையுமின்றி தனி நபராகவே வோஜின் இந்த அழகான வீட்டை 6 ஆண்டுகளில் கட்டியுள்ளார். நிகோலா டெஸ்லா மற்றும் மிஹாஜ்லோ புபின் போன்ற கண்டுபிடிப்பாளர்களின் கண்டுபிடிப்புகள் தான், புதிய முயற்சியில் இந்த வீட்டை கட்டய உதவியதாகவும் அவர் கூறினார்.

வோஜின் குசிக் கட்டியிருக்கும் இந்த சுழலும் வீடு, அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துளள்து. அதோடு பலரும் இந்த சுழலும் வீட்டை பார்க்க வருகிறார்கள்.
newstm.in

