Theme Check

8 மாவட்ட பாஜக தலைவர்கள் நீக்கம் - மாநில தலைவர் அண்ணாமலை..!!

8 மாவட்ட பாஜக தலைவர்கள் நீக்கம் - மாநில தலைவர் அண்ணாமலை..!!

8 மாவட்ட பாஜக தலைவர்கள் நீக்கம் - மாநில தலைவர் அண்ணாமலை..!!
X

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சி மாவட்டங்களில் கீழ்கண்ட மாவட்டங்களை சீரமைக்கும் பொருட்டு திருநெல்வேலி, நாகை, சென்னை மேற்கு, வட சென்னை மேற்கு, கோயம்புத்தூர் நகர், புதுக்கோட்டை, ஈரோடு வடக்கு, திருவண்ணாமலை வடக்கு உள்ளிட்ட மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், அணிகள், பிரிவுகள் மற்றும் மண்டல கமிட்டிகள் அனைத்தும் முழுமையாக கலைக்கப்படுகிறது.

புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படும் வரை, தற்காலிகமாக கீழ்கண்ட நிர்வாகிகள் மாவட்ட பொறுப்பாளர்களாக நியமிகப்படுகிறார்கள்.

புதிய மாவட்ட பொறுப்பாளர்கள்:

திருநெல்வேலி - ஜோதி
நாகை - வரதராஜன்
சென்னை மேற்கு - மனோகரன்
வட சென்னை மேற்கு - பாலாஜி
கோயம்புத்தூர் நகர் - முருகானந்தம்
புதுக்கோட்டை - செல்வ அழகப்பன்
ஈரோடு வடக்கு - செந்தில்குமார்
திருவண்ணாமலை வடக்கு - ஏழுமலை

என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகரப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் கட்சி ரீதியிலான 8 மாவட்ட தலைவர்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நீக்கியுள்ள நிகழ்வு அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
Share it