Theme Check

ஆட்டோ மீது மின்கம்பி விழுந்து 8 பேர் உடல் கருகி பலி !!

ஆட்டோ மீது மின்கம்பி விழுந்து 8 பேர் உடல் கருகி பலி !!

ஆட்டோ மீது மின்கம்பி விழுந்து 8 பேர் உடல் கருகி பலி !!
X

ஆட்டோவில் மின்சாரம் பாய்ந்து 8 பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இருந்து விவசாய பணிக்காக 8 பேர் ஆட்டோவில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, தாடிமரி மண்டலம் கொண்டம்பள்ளி என்ற இடத்தில் ஆட்டோ சென்றுக்கொண்டிருந்தபோது, மேலே சென்ற உயர்மின் அழுத்த மின்கம்பி திடீரென அறுந்து ஆட்டோ மீது விழுந்தது.

யாரும் சிறிதும் எதிர்பாராத இந்த ஆட்டோ மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது. இதற்கிடையில் ஆட்டோவிற்குள் இருந்து 8 பேரும் மின்சாரம் பாய்ந்து, தீயில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சாலையில் ஆட்டோ தீப்பிடித்து எரிந்து 8 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.‘

போலீசார்

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக விரைந்துசென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும் மின்வாரிய பயணியாளர்கள் சென்று மின்இணைப்பை துண்டித்தபிறகு தான் ஆட்டோவை நகர்த்த முடிந்தது. அதன்பின்னர் எரிந்த நிலையில் 8 பேரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனிடையே, மின்கம்பி அறுந்துவிழுந்த அடுத்த விநாடியில் ஆட்டோவில் இருந்து ஓட்டுநர் மட்டும் வெளியே பாய்ந்தார். இதனால் அவர் காயத்துடன் உயிர் தப்பினார். தற்போது வரை பிடித்து சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கம்பி அறுந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it