Theme Check

ஆட்டோ மீது மின்சாரம் பாய்ந்ததில் 8 பேர் உடல் கருகி பலி..!!

ஆட்டோ மீது மின்சாரம் பாய்ந்ததில் 8 பேர் உடல் கருகி பலி..!!

ஆட்டோ மீது மின்சாரம் பாய்ந்ததில் 8 பேர் உடல் கருகி பலி..!!
X

ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் தடிமரி பகுதியில் உள்ள சில்லகொண்டையா பள்ளி கிராமத்தை சேர்ந்த 8 கூலித் தொழிலாளர்கள் தங்களது பணிக்காக ஆட்டோவில் நேற்று காலை சென்று கொண்டிருந்தனர்.

auto

அப்போது ஆட்டோ கிராமத்தை தாண்டி சென்று கொண்டிருந்தபோது உயர் அழுத்த கம்பிகள் ஆட்டோ மீது அறுந்து விழுந்ததுள்ளது. இதில் அந்த ஆட்டோ முழுக்க மின்சாரம் பாய்ந்து உடனடியாக தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் ஆட்டோவின் உள்ளிருந்த 8 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே எரிந்துள்ளனர். ஆட்டோவில் இருந்து இறக்க முயற்சித்தபோதும் தீ வேகமாக பரவியதால் பயணிகள் ஆட்டோவிற்குள்ளேயே சிக்கிக்கொண்டனர்.

இந்த தீ விபத்தில் ஆட்டோவின் உள்ளிருந்த 8 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மீட்புக்குழுவினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

dead-body

மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்து, ஆட்டோ தீப்பற்றி 8 பேர் உடல்கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
Share it