Theme Check

விரட்டி விரட்டி கடித்த வெறி நாய்.. சிறுமிகள் உட்பட 8 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி..!

விரட்டி விரட்டி கடித்த வெறி நாய்.. சிறுமிகள் உட்பட 8 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி..!

விரட்டி விரட்டி கடித்த வெறி நாய்.. சிறுமிகள் உட்பட 8 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி..!
X

பாலக்கோடு அருகே, வீதியில் சென்றவர்களை வெறிநாய் விரட்டி விரட்டி கடித்ததில் காயமடைந்த இரண்டு சிறுமிகள் உட்பட 8 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பஞ்சப்பள்ளி பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இந்நிலையில், வெறிநாய் ஒன்று வீதியில் சென்றவர்களை சென்றவர்களை விரட்டி விரட்டி கடித்து குதறியுள்ளது.

இதில் பஞ்சப்பள்ளி பகுதியைச் சேர்ந்த மாதவராஜ் என்பவரின் மகள் நிஷா (15), அருண் என்பவரின் மகள் தாரிகா (8), கோமதி (30), நரசிம்மன் (40), சந்திரசேகர் (49) உட்பட எட்டு பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து அவர்கள், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், பஞ்சப்பள்ளி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Next Story
Share it