Theme Check

ஏழு ஆண்டுகளில் 8 கோயில்களுக்கு ரூ. 8 லட்சம் நன்கொடை வழங்கிய பிச்சைக்காரர்

தினமும் கோயில் வாசலில் பிச்சை எடுத்து வாழ்ந்து வரும் பிச்சைக்காரர், ஏழு ஆண்டுகளில் 8 கோயில்களுக்கு ரூ. 8 லட்சம் வரை நன்கொடை வழங்கியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏழு ஆண்டுகளில் 8 கோயில்களுக்கு ரூ. 8 லட்சம் நன்கொடை வழங்கிய பிச்சைக்காரர்
X

தினமும் கோயில் வாசலில் பிச்சை எடுத்து வாழ்ந்து வரும் பிச்சைக்காரர், ஏழு ஆண்டுகளில் 8 கோயில்களுக்கு ரூ. 8 லட்சம் வரை நன்கொடை வழங்கியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் விஜயவாடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் யாதி ரெட்டி. இளம் வயதில் இருந்தே ரிக்‌ஷா ஓட்டும் தொழில் செய்து வந்தார். வயது மூப்பின் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு ரிக்‌ஷா ஓட்டும் தொழிலை அவர் விட்டுவிட்டார்.இதனால் விஜயவாடா மாவட்டத்திலுள்ள பிரசித்திப் பெற்ற கோயில் வாசல்களுக்குச் சென்று தினமும் பிச்சை எடுத்து வாழ்ந்து வருகிறார். பிச்சை எடுக்கும் பணத்தில் தினந்தோறும் சாப்பாட்டு செலவுக்கு போக, மற்ற பணத்தை சேமித்து வைக்க தொடங்கினார்.

ஏழு ஆண்டுகளில் 8 கோயில்களுக்கு ரூ. 8 லட்சம் நன்கொடை வழங்கிய பிச்சைக்காரர்

கடந்த ஏழு ஆண்டுகளாக கோயில் வாசல்களில் பிச்சை எடுத்து வரும் யாதி ரெட்டிக்கு தற்போது வயது 72 ஆகிறது. இந்நிலையில், விஜயவாடா பகுதியிலுள்ள ஒரு சாய்பாபா கோயிலுக்கு நன்கொடையாக ரூ. 1 லட்சத்திற்குரிய காசோலையை வழங்கியுள்ளார்.இதை கண்டு கோயில் நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அதை வங்கிக்கு கொண்டு சென்று பார்த்த போது, யாதி ரெட்டி எழுதிக் கொடுத்த காசோலை மூலம் ரூ. 1. லட்சம் அவர்களுக்கு கிடைத்தது. இது அவர்களுக்கு மேலும் அதிர்ச்சியை அளித்தது.

இதுதொடர்பாக விசாரித்த போது, கோயில் வாசல்களில் பிச்சை எடுத்து வரும் யாதி ரெட்டி இதுவரை எட்டு கோயில்களுக்கு ரூ. 8 லட்சம் வரை நன்கொடை வழங்கியுள்ளது தெரிய வந்தது. இதுதொடர்பாக செய்திகள் பரவ, தற்போது விஜயவாடா பகுதியில் ஸ்டார் அந்தஸ்து பெற்ற பிச்சைக்காரராக மாறியுள்ளார் யாதி ரெட்டி.

newstm.in

Tags:
Next Story
Share it