இனி 8 மடங்கு அதிக கட்டணம் – ஏப்ரல் 1 முதல் அமல்!!
இனி 8 மடங்கு அதிக கட்டணம் – ஏப்ரல் 1 முதல் அமல்!!

உலக அளவில் காற்று மாசுபாடு அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதனால் காற்று மாசுபாட்டை தடுக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏப்ரல் 1 ஆம் தேதி புதிய விதி அமல்படுத்தப்பட உள்ளது.
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அக்டோபர் 2021 இல் புதிய விதியை ஏப்ரல் 1, 2022 முதல் அமல்படுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, 15 ஆண்டுகள் பழமையான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன உரிமையாளர்கள், வாகன பதிவை புதுப்பிக்க இனி 8 மடங்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும்.

உதாரணமாக, 15 ஆண்டுகள் பழைய காரின் பதிவை புதுப்பிக்க முன்பு ரூ.600 என்ற இருக்கும் நிலையில், புதிய விதியின் கீழ் இனி ரூ.5,000 செலுத்த வேண்டி இருக்கும். அதே போன்று, பழைய பைக்கிற்கு, 300 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், புதிய விதியின் படி 2400 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
லாரி, பேருந்து போன்ற கன ரக வாகனங்கள் ரூ.1,500க்கு புதுப்பிக்கப்பட்டு வந்த நிலையில், இனி, ரூ.12,500 செலவாகும். முன்பு சிறிய பயணிகள் வாகனங்களைப் புதுப்பிக்க ரூ.1,300 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. ஆனால் இப்போது புதுப்பிக்க ரூ.10,000 வசூலிக்கப்படுகிறது.

வாகன மாசுபாட்டைக் குறைக்க மத்திய அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பழைய வாகனங்களை களைய புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
newstm.in

