உடலில் 60 எலும்புகள் நொறுங்க 8 வார பச்சிளம் குழந்தை கொடூர கொலை !

உடலில் 60 எலும்புகள் நொறுங்க 8 வார பச்சிளம் குழந்தை கொடூர கொலை !

உடலில் 60 எலும்புகள் நொறுங்க 8 வார பச்சிளம் குழந்தை கொடூர கொலை !
X

பிறந்து வெறும் 8 வாரங்களே ஆன பச்சிளம் குழந்தையை 60-க்கும் மேற்பட்ட எலும்பு முறிவுகள் ஏற்படும் அளவிற்கு தாக்கி பெற்றோரே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் பெஞ்சமின் ஓ'ஷியா (26) மற்றும் நவோமி ஜான்சன் (24) தம்பதி கடந்த ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். இருவரும் மருத்துவர்கள் ஆவர். இருவரும், 8 வாரமே ஆன தங்கள் மகள் அமினா-ஃபயேவை கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.

அதாவது, 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி லண்டன் பகுதியில் தம்பதியினரின் வீட்டில் குழந்தை இறந்தது. அன்று காலை, குழந்தை சுவாசிப்பதை நிறுத்திவிட்டாள் என அவர்களே மருத்துவ உதவிக்கு அழைத்துள்ளனர். அதேபோல், மருத்துவர்கள் வந்து பார்க்கையில், குழந்தையின் வெளித்தோற்றத்தில் எந்தவித காயமும் இல்லை என மருத்துவர்கள் கூறினர்.

parents

பின்னர், குழந்தையின் விலா எலும்புகளில் 41 எலும்பு முறிவுகளும், கைகால்களில் 24 எலும்பு முறிவுகளும் இருந்தது மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தை அமினா-ஃபாயே தொடர்ந்து உடல் ரீதியான துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியிருப்பது தெளிவாக தெரிவதாக மருத்துவர்கள் கூறினர். பின்னர் போலீசில் அளித்த புகாரில் விசாரணை நடத்தப்பட்டது. இதில், பெஞ்சமின் ஓ'ஷியா- நவோமி ஜான்சன் தம்பதியே தங்கள் குழந்தையை ஈவு இரக்கமின்றி கொலை செய்தது தெரியவந்தது.

பச்சிளம் குழந்தைக்கு அவர்கள் உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியதற்காவும், குழந்தை வலியில் துடிதுடித்து சாக அனுமதித்ததற்காகவும் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டனர். இது தொடர்பான வழக்கு லண்டன் கிரவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், ஓஷியாவுக்கு எட்டு ஆண்டுகள் எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, ஜான்சனுக்கு ஏழு ஆண்டுகள் இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இங்கிலாந்தில் குழந்தை கொடுமை வழக்குகள் அதிகரித்திருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

Tags:
Next Story
Share it