சமையல் கேஸ் வாங்கப் போன விவசாயிக்கு ரூ.80 லட்சம் ஜாக்பாட்!!
சமையல் கேஸ் வாங்கப் போன விவசாயிக்கு ரூ.80 லட்சம் ஜாக்பாட்!!

சமையல் கேஸ் வாங்கப்போன இடத்தில் இளைஞர் ஒருவருக்கு லாட்டரி சீட்டு மூலம் ரூ.80 லட்சம் கிடைத்தது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியை சேர்ந்த வில்லியம் ஜோன்ஸ் (32) என்பவர் விவசாயத் தொழில் செய்து வருகிறார். அண்மையில் இவர் சமையல் எரிவாயு (GAS Cylinder) வாங்க ஒரு கடைக்கு சென்றார். அப்போது அங்கே லாட்டரி டிக்கெட் விற்கப்பட்டது.
இதனையடுத்து வில்லியம், குறைந்த தொகைக்கு ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கினார். அந்த டிக்கெட்டில் அவருக்கு 500 டாலர் பரிசு விழுந்தது (இந்திய மதிப்பில் ரூ.39,942). இதையடுத்து மீண்டும் ஒருமுறை வாங்கி பார்க்கலாம் என்ற எண்ணத்தில் 20 டாலர் பணத்துக்கு சீட்டு வாங்கினார்.

அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக அவருக்கு ஒரு லட்சம் டாலர் பரிசுத் தொகை கிடைத்துள்ளது (இந்திய மதிப்பில் ரூ.7,98,88,85) ஆகும். இதனை சற்றும் எதிர்பாராத வில்லியம், கிடைத்த லாட்டரி பணத்தை தனது திருமணத்திற்கு செலவிடப்போறதாக கூறியுள்ளார்.
newstm.in

