80 வயது மூதாட்டியின் ஆடையை களைந்து சோதனை.. விமான நிலையத்தில் பரபரப்பு !
80 வயது மூதாட்டியின் ஆடையை களைந்து சோதனை.. விமான நிலையத்தில் பரபரப்பு !

80 வயது மாற்றுத்திறனாளி மூதாட்டியின் ஆடையை களையக் கோரிய வீரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
நாகலாந்தை சேர்ந்தவர் மொகலோ கிகோன் (80) என்ற மூதாட்டி மாற்றுத்திறனாளி ஆவார். இவர் தனது பேத்தியுடன் டெல்லி செல்வதற்காக அசாம் மாநிலம் கவுகாத்தி விமான நிலையத்திற்கு சென்றார்.
அப்போது அங்கு இருந்த மத்திய தொழில் பாதுகாப்புபடை வீரர்கள் அவர்களை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது மொகலோ கிகோன் இடுப்பு பகுதியில் இருந்து ஒரு விதமான சத்தம் எழுந்தது. இது குறித்து வீரர்கள் மூதாட்டியிடம் கேள்வி எழுப்பினர்.
அப்போது, தனது இடுப்பு பகுதியில் ஆபரேஷன் செய்து இருந்ததால் பிளேட் வைத்து இருந்தார். இதனால் இந்த சத்தம் வந்ததாக தெரிகிறது என்றார்.

எனினும், சந்தேகம் அடைந்த பாதுகாப்பு படையினர் அவரை சோதனை செய்ய முயன்றனர். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து, தனது நிலை குறித்து விளக்கி கூறினார். ஆனாலும் அதை மீறி அவர்கள் அந்த பெண்ணின் ஆடையை களைந்து சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இது தொடர்பாக அவரது மகள் விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இதனையடுத்து இந்த விவகாரம் வெளியேவந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளி மூதாட்டியின் ஆடையை களைத்ததாக கூறப்படும் விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடைய, மூதாட்டியின் ஆடையை களையக் கோரிய வீரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
newstm.in

