Theme Check

தன் உயிரை தியாகம் செய்து கொரோனா நோயாளியை காப்பாற்றிய 85 வயது முதியவர் !!கண்கலங்க வைக்கும் முதியவரின் பதில் !!

தன் உயிரை தியாகம் செய்து கொரோனா நோயாளியை காப்பாற்றிய 85 வயது முதியவர் !!கண்கலங்க வைக்கும் முதியவரின் பதில் !!

தன் உயிரை தியாகம் செய்து கொரோனா நோயாளியை காப்பாற்றிய 85 வயது முதியவர் !!கண்கலங்க வைக்கும் முதியவரின் பதில் !!
X

நாடு முழுவதும் கொரோனா பரவல் மிகவும் தீவிரமாக உள்ளது. நாள் ஒன்றுக்கு 3.5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுகின்றனர். இந்த கொரோனா 2ஆவது அலையில் பல்வேறு அவலங்களுக்கு இடையே வாழ்கிறோம் என்பது தினம் தினம் உறுதியாகிறது.ஒரு புறம் கொரோனா நம்மளை வாட்டி எடுக்கிறது என்றால் இன்னொருபுறம் ஆக்சிஜன் பற்றாற்குறை,ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் துடிதுடித்து இறக்கின்றனர்.

நாம் உயிரோடு இருக்க போராடி கொண்டிருக்கும் இந்த வேலையில் மகாராஷ்டிரா நாக்பூரை சேர்ந்த 85 வயது முதியவர், தன் உயிரை பற்றி பொருட்படுத்தாமல் இதற்கு முன் பார்க்காத யாரென்றே தெரியாத கொரோனா நோயாளியை காப்பாற்ற தன் உயிரை தியாகம் செய்துள்ள கண்கலங்க வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

நாக்பூர் இந்திரா காந்தி மருத்துவமனையில் நாராயண் என்ற 85 வயது முதியவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். பிறகு அவருக்கு இவருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியானது. அங்கு தங்கி ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால், தற்போது அங்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருவது அனைவரும் அறிந்ததே.

இவரது ஆக்சிஜன் லெவலும் இறங்கிக் கொண்டிருந்தது. அந்தவேளையில் அதே மருத்துவமனையில் பெண் தனது 40 வயது கணவருக்காக மருத்துவமனையில் இடம் கேட்டு கதறி அழுது மன்றாடிக்கொண்டிருந்தார். ஆனால், அந்நபருக்கு அங்கு இடம் கிடைக்கவில்லை. மருத்துவர்கள் மருத்துவமனையில் மேலும் இடம் இல்லை என கூறிவிட்டனர்.

இந்த நிலையில் அதனை பார்த்த அந்த 85 வயது முதியவர் நாராயண் மருத்துவர்களிடம் சென்று, நான் என் வாழ்க்கையை வாழ்ந்து விட்டேன். அந்த இளைஞரின் உயிர் முக்கியம், அவரது குழந்தைகளும் சிறு வயதினர், என் படுக்கையை அவருக்குக் கொடுங்கள் என்று கூறியுள்ளார். மருத்துவர்கள் அவரிடம் உங்கள் உடல் நிலை சரியாக இல்லை உங்களுக்கும் சிகிச்சை அவசியம் என்று கூறியுள்ளனர்.

ஆனால் அந்த முதியவர், தன் மகளைக் கூப்பிட்டு அவரிடம் சூழ்நிலையை விளக்கி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குச் சென்றார். அதேபோல் அந்த 45 வயது நபருக்கு மருத்துவமனையில் இடம் கிடைத்தது. ஆனால் வீட்டுக்குச் சென்று 3 நாட்கள்தான் உயிரோடு இருந்துள்ளார். அதன்பின்னர் முதியவர் இறந்துவிட்டார்.

தற்போது இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it