Theme Check

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்.. தாயும் சேயும் நலம்- உலகளவில் இதுவும் ஒரு சாதனை !

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்.. தாயும் சேயும் நலம்- உலகளவில் இதுவும் ஒரு சாதனை !

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்.. தாயும் சேயும் நலம்- உலகளவில் இதுவும் ஒரு சாதனை !
X

மேற்கு ஆப்பிரிக்கா நாடானா மாலியைச் சேர்ந்தவர் ஹலிமா சிஸ்ஸின். 25 வயதான இவர் கர்ப்பம் தரித்தார். மருத்துவமனையில் முதலில் இவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், இவரது கர்ப்பப் பையில் ஏழு குழந்தைகள் இருப்பதாகக் கணித்தனர். மேலும், சிஸ்ஸுக்கு சிறப்பு கவனிப்பு தேவை எனக் கூறினர்.

இதையடுத்து ஹலிமா சிஸ்ஸின் மொராக்கோவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு மருத்துவர்களின் சிறப்பு கண்காணிப்பில் இருந்த சிஸ்ஸினுக்கு ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறந்துள்ளன. அந்தப் பெண்ணுக்கு 7 குழந்தைகள் பிறக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்டு வந்த நிலையில், மொராக்கோவிலுள்ள மருத்துவமனையில் அவருக்கு 5 பெண் குழந்தைகள் மற்றும் 4 ஆண் குழந்தைகள் நேற்றுமுன்தினம் பிறந்தன.

தாய் மற்றும் குழந்தைகள் அனைவரும் நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஒரே பிரசவத்தில் அதிக குழந்தைகள் பெற்றறெடுத்தவர் என்ற சாதனையை சிஸ்ஸின் சமன் செய்துள்ளளார்.

வரலாற்றில் இதுவரை ஆஸ்திரேலியாவில் ஒரு பெண்ணுக்கும் மலேசியாவில் ஒரு பெண்ணுக்கும் ஒரே பிரசவத்தில் தலா 9 குழந்தைகள் பிறந்தன. ஆனால் அந்தக் குழந்தைகளில் யாரும் உயிா் பிழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


newstm.in


Tags:
Next Story
Share it