Theme Check

தெலங்கானாவில் நடந்த சாலை விபத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 9 பேர் பலி..!!

தெலங்கானாவில் நடந்த சாலை விபத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 9 பேர் பலி..!!

தெலங்கானாவில் நடந்த சாலை விபத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 9 பேர் பலி..!!
X

தெலங்கானா மாநிலம் காமா ரெட்டி மாவட்டம் பிட்லம் பகுதியில் சில்லர்க்கி கிராமத்தைச் சேர்ந்த 0 பேர் மினி வேனில் காமரெட்டி பகுதியில் நடைபெற்ற இறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

எல்லாரெட்டி மண்டலம் ஹாசன்பள்ளி அருகே அவர்களின் வாகனம் மீது எதிரே வந்த லாரி மோதியது. இந்த கோர விபத்தில் வேன் அப்பளம் போல நொறுங்கி சம்பவ இடத்திலேயே 3 பெண்கள் உயிரிழந்தனர்.

விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள், காயமடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக பன்சுவாடா மருத்துவமனை மற்றும் காமாரெட்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி மேலும் 3 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

Telangana-accident

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பன்சுவாடா மருத்துவமனை மற்றும் காமாரெட்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்தவர்களில் 7 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒரே கிராமத்தைச் சேர்ந்த 9 பேர் விபத்தில் பலியான சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த பிரதமர் மோடி, நிதியுதவி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரண தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it