Theme Check

ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மர்மமான முறையில் மரணம்..!!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மர்மமான முறையில் மரணம்..!!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மர்மமான முறையில் மரணம்..!!
X

மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி மாவட்டத்தில் உள்ள ஹைசால் பகுதியில், சேர்ந்த சகோதரர்கள் போபத் வன்மோர் மற்றும் மானிக் வன்மோர். இவர்கள் தங்கள் தாயார், மனைவி, நான்கு குழந்தைகளுடன் அங்கு வசித்து வருகின்றனர். இதில் போபத் வன்மோர் ஆசிரியராகவும், மானிக் வன்மோர் கால்நடை மருத்துவராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

nine-family-members-deadbodies-found-in-home

இந்நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் உயிரிழப்புக்கு விஷம் அருந்தியது காரணமாக இருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது. இதனையடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இரு சகோதரர்களும் கடும் கடன் சுமையில் சிக்கித் தவித்து வந்ததால் இந்த முடிவை எடுத்திருக்கக் கூடும் என தெரியவந்துள்ளது. உடல்களை கைப்பற்றிய போலீசார் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், அந்த வீட்டில் இருந்து 9 சடலங்களை நாங்கள் கைப்பற்றினோம். மூன்று பேரின் சடலங்கள் ஒரு பகுதியிலும், ஆறு பேரின் சடலங்கள் வீட்டின் மற்றோரு பகுதியிலும் கண்டுபிடித்தோம்.

உயிரிழந்தவர்கள் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். எனினும் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகே உண்மை தெரிய வரும் என தெரிவித்துள்ளனர்.

man-attempts-suicide

உயிரிழந்தவர்களின் உடல்களில் எந்த வெளிப்புற காயங்களும் தென்படவில்லை என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். சம்பவம் தொடர்பாக முறையாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் கூறிப்பட்டுள்ளது.

Next Story
Share it