90 % திமுக அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது.. போட்டு தாக்கிய அண்ணாமலை !!
90 % திமுக அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது.. போட்டு தாக்கிய அண்ணாமலை !!

90 சதவீத தமிழக அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது, விமானம் ஏற கூட தெரியாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் திராவிட மாயை என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அண்ணாமலை, திராவிடம் என்பது குழப்பம் நிறைந்த ஒன்று. திமுக தொடங்கப்பட்டதே குழப்பத்தில் தான். தேசிய குற்ற ஆவண புள்ளிவிவரங்களின்படி தமிழகத்தில் தீண்டாமையில் திருவாரூர் மாவட்டம் தான் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் பதிவான 600 தீண்டாமை வழக்குகளில் 156 திருவாரூரில் பதிவானவை.

திமுகவை வீழ்த்துவது எளிது. திமுகவில் 260 நபர்கள் மேல்மட்டத்தில் உள்ளனர். அவர்களை வீழ்த்தி விட்டால் திமுகவை வீழ்த்துவது பெரிய காரியமில்லை. திமுகவும் பெரிய வெங்காயமும் ஒன்று அதனை உரிக்க உரிக்க அதில் ஒன்றும் இருக்காது.திமுக அமைச்சர்கள் சம்பந்தமில்லாமல் பேசுகிறார்கள், கோடைகாலத்தில் மழை வந்தாலும் அதற்கு காரணம் திராவிட மாடல் என்று கூறுவார்கள்.
90 சதவீத தமிழக அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது , விமானம் ஏற கூட தெரியாது ஆங்கிலம் தெரியாததால் டெல்லி சென்று தமிழகத்திற்கு ஒரு பைசா கூட நிதி கூட இவர்களால் பெற்று வர முடியாது என விமர்சித்து பேசினார். மேலும் வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
newstm.in

