90 வயது நண்பர் காலமானார்.. வேதனையில் கமல்ஹாசனின் இரங்கல் !!

90 வயது நண்பர் காலமானார்.. வேதனையில் கமல்ஹாசனின் இரங்கல் !!

90 வயது நண்பர் காலமானார்.. வேதனையில் கமல்ஹாசனின் இரங்கல் !!
X

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த உலகின் முன்னணி எழுத்தாளரான ஜான் கிளாட் கேரியார் என்பவர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவத்து வருகின்றனர்.

அந்த வகையில் ஜான் கிளாட் கேரியாரின் வாசகர்களில் ஒருவரான கமல்ஹாசன் தனது டுவிட்டரில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில், தனது 90ஆவது வயதில் அடியெடுத்து வைத்த உலகின், ஃபிரான்ஸ் நாட்டின், மிக முக்கிய எழுத்தாளரும், என் நண்பருமான ஜான் கிளாட் கேரியார் இன்று காலமானார். அவர் எழுத்துக்களும் மனித நேயமும் அவர் தொட்ட மனங்களால் தொடர்ந்து வாழும் என்று பதிவு செய்துள்ளார்.


newstm.in

Tags:
Next Story
Share it