ரஷ்ய வீரர்கள் 9,000 பேர் உயிரிழப்பு.. உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தகவல்..!
ரஷ்ய வீரர்கள் 9,000 பேர் உயிரிழப்பு.. உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தகவல்..!

ரஷ்ய படைகள் உக்ரைன் மீது இன்று 8 வது நாளாக உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளது.
அதேபோல், உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், உக்ரைன் - ரஷ்யா இடையேயான மோதலில் இதுவரை 9,000 ரஷ்ய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், உக்ரைன் நடத்திய பதில் தாக்குதலில் இதுவரை ரஷ்யாவின் 30 போர் விமானங்கள், 31 ஹெலிகாப்டர்கள், 217 பீரங்கி வாகனங்கள், 374 ராணுவ வாகனங்கள், 42 ராக்கெட் ஏவுகணைகள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

