Theme Check

90's கிட்ஸ் பரிதாபம்.. போஸ்டர் ஒட்டி பெண் தேடும் மதுரை இளைஞர்..!

90's கிட்ஸ் பரிதாபம்.. போஸ்டர் ஒட்டி பெண் தேடும் மதுரை இளைஞர்..!

90s கிட்ஸ் பரிதாபம்.. போஸ்டர் ஒட்டி பெண் தேடும் மதுரை இளைஞர்..!
X

மதுரையில் உள்ள சுவர்களில் ஒட்டப்படும் அரசியல், சினிமா நடிகர்கள் குறித்தான விளம்பர சுவரொட்டிகள் எப்போதும் பேசு பொருளாகி, வைரலாவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது, மணமகள் தேவை என 90’s கிட்ஸ் ஒட்டியுள்ள போஸ்டர் வைரலாகி வருகிறது. 90-களில் பிறந்த மதுரை வில்லாபுரம் அருகே மீனாட்சி நகரைச் சேர்ந்த 27 வயதுடைய ஜெகன் என்ற இளைஞர், மாத வருமானமாக 40 ஆயிரம் சம்பாதிப்பதுடன் சொந்தமாக நிலமும் கொண்டிருந்த நிலையிலும் தனக்கு திருமணம் ஆகாத விரக்தியில், மதுரை மாநகர், புறநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுவர்களில் மணமகள் தேவை என விளம்பர சுவரொட்டி அடித்து பெண் தேடும் படலத்தை துவக்கி உள்ளார்.
madurai2
ஏற்கனவே 2K கிட்ஸ் திருமணம் முடித்து குழந்தைகளுடன் வலம் வருவதால், பல 90’s கிட்ஸ்களுக்கு திருமணம் ஆகாமல் இருந்து வரும் நிலையில், தற்போது நூதனமுறையில் மணமகள் தேவை என்று இந்த இளைஞர் ஒட்டியுள்ள போஸ்டர் 90’s கிட்ஸ் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
Share it