கடந்த 3 ஆண்டுகளில் 9,140 பேர் தற்கொலை.. காரணம் என்ன தெரியுமா..?
கடந்த 3 ஆண்டுகளில் 9,140 பேர் தற்கொலை.. காரணம் என்ன தெரியுமா..?

கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது.
இதனால் பலர் வேலை இழந்தனர். பலர் வேலையை இழந்து விடுவோமோ என்ற கவலையில் இருந்தனர். இந்த காலகட்டத்தில், பல நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில் பலரும் வேலை கிடைக்காமல் திண்டாடினர்.
இந்நிலையில், நாடு முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் வேலை கிடைக்காத வேதனையில் 9,140 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினர்களின் கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய் பதிலளித்தார்.
அப்போது பேசிய அவர், நாட்டில் வேலை கிடைக்காததால் 2018-ல் 2,746 பேரும், 2019-ல் 2,851 பேரும், 2020-ல் 3540 பேரும் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், புதிய வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்கும் வண்ணம் முதலாளிகளுக்கு உதவ ஊக்குவிப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story

