95 லட்சம் மோசடி! எம்எல்ஏ செந்தில்பாலாஜி வீட்டில் அதிரடி சோதனை!
95 லட்சம் மோசடி! எம்எல்ஏ செந்தில்பாலாஜி வீட்டில் அதிரடி சோதனை!

முன்னாள் அமைச்சரும், அரவக்குறிச்சி தொகுதி திமுக எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி வீட்டில் சென்னை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் டிஎஸ்பி தலைமையில் 15 பேர் கொண்ட போலீசார் கரூர் ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில்பாலாஜியின் வீடு, அவரது சகோதரர் வீடு மற்றும் சென்னையில் உள்ள வீடு என 3 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதிமுகவில் இருந்த போது 2011-15 காலகட்டத்தில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில்பாலாஜி.

போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக 16 பேரிடம் ரூ.95 லட்சம் பெற்று மோசடி செய்ததாகப் புகார் இருந்தது. மோசடி குறித்து அம்பத்தூர் கணேஷ்குமார் என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீஸில் ஏற்கனவே புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரூர் மட்டுமல்லாது திருவண்ணாமலையில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
newstm.in

