ரஷ்ய தாக்குதலில் 97 குழந்தைகள் உயிரிழப்பு : உக்ரைன்!!
ரஷ்ய தாக்குதலில் 97 குழந்தைகள் உயிரிழப்பு : உக்ரைன்!!

உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலால் 97 குழந்தைகள் உயிரிழந்துவிட்டதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கனடா நாடாளுமன்றத்தில், அந்நாட்டு உறுப்பினர்களிடையே உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி காணொளி மூலம் பேசினார். அப்போது தங்கள் நாட்டுக்கு கனடா அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி கூறினார்.
உக்ரைனின் நகரங்கள் மீது ரஷ்யா அடுத்தடுத்து மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நடத்தி வருவதாகக் குற்றம்சாட்டிய செலன்ஸ்கி, ரஷ்யாவின் அத்துமீறல்களை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று கூறினார்.

உக்ரைன் சந்தித்து வரும் பாதிப்புகள் குறித்து விளக்கிய அவர், போரினால் உக்ரைனில் 97 குழந்தைகள் உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவலையும் வெளியிட்டார். இந்த தகவல் உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே ரஷ்யா – உக்ரைன் போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், நேட்டோவில் இணையப் போவதில்லை என்ற உண்மையை உக்ரைன் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என உக்ரைன் அதிபர் தெரிவித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
newstm.in

