Theme Check

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்குவதாக கூறி 97,37,000 மோசடி..!!

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்குவதாக கூறி 97,37,000 மோசடி..!!

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்குவதாக கூறி 97,37,000 மோசடி..!!
X

குடியாத்தத்தில் செயல்பட்டு வருகிறது மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை.இந்த கிளையில், உமாமகேஸ்வரி என்பவர் 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் மேலாளராக பணியாற்றி வந்தார். அந்த கால கட்டத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.97 லட்சத்து 37 ஆயிரம் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

women-self-group

இதுகுறித்து துறை உயர் அலுவலர்களுக்கு புகார்கள் சென்ற நிலையில், குடியாத்தம் வங்கியில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் உமாமகேஸ்வரி பணமோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி, வேலூர் மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

women-arrest

புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். பின்னர் உமாமகேஸ்வரியை போலீசார் கைது செய்தனர். தற்போது உமாமகேஸ்வரி வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

கூட்டுறவு வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் முறைகேட்டில் ஈடுபட்ட பெண் மேலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
Share it