எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் 99 % மதிப்பெண்.. பிரபல நடிகை அசத்தல் !!
எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் 99 % மதிப்பெண்.. பிரபல நடிகை அசத்தல் !!

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் பங்கேற்று பிரபல நடிகை வைஷ்ணவி 99 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
கன்னட சின்னத்திரை நடிகையாக இருந்து வருபவர் மகதி வைஷ்ணவி பட். இவர் கன்னட சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமடைந்தார். மேலும் கர்நாடகாவில் ரியலிட்டி ஷோக்களில் பங்கேற்று மக்கள் மத்தியில் நன்கு அறியப்படும் நடிகையாக உள்ளார். இவர் பத்தாம் வகுப்பு மாணவி என்றால் பெரும் ஆச்சரியம் தான்.

நடிகை மகதி வைஷ்ணவி சின்னத்திரை தொடர்களில் நடித்துக் கொண்டே பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தார். மேலும் எஸ்எஸ்எல்சி தேர்வும் எழுதினார். இந்த நிலையில் சமீபத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் பெரும் வெற்றிபெற்று அசத்தியுள்ளார்.
அவர் தனது மதிப்பெண்களின் பட்டியலை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். இதனை அவரது ரசிகர்கள் வைரலாக்கியுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக 625 மதிப்பெண்களுக்கு வைஷ்ணவி 619 மதிப்பெண்களை அவர் எடுத்திருக்கிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மதிப்பெண்ணின் ஸ்க்ரீன் ஷாட்டை பதிவிட்டு வைஷ்ணவி கூறியிருப்பதாவது, நான் எழுதிய தேர்வின் ரிசல்ட் வந்து விட்டது. நான் மிக மிக மகிழ்ச்சியாக உள்ளேன். 99.04 சதவீத மதிப்பெண்களை நான் பெற்றிருக்கிறேன்.

அம்மா, அப்பா, தாத்தா, பாட்டிக்கு நன்றி. எனது பள்ளி ஆசிரியர்களுக்கும், பள்ளிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் நடிப்பதற்கும், படிப்பதற்கு இவர்கள் உறுதுணையாக இருந்தார்கள். நான் பங்கேற்றுள்ள ஜீ நிறுவனத்திற்கும் நன்றி. உங்களது ஆதரவு இல்லாமல் நான் இவற்றை செய்திருக்க முடியாது.
குறிப்பாக எனது இன்ஸ்டாகிராம் குடும்பத்திற்கு நன்றி. தேர்வு காரணமாக இன்ஸ்டாகிராமில் என்னால் பதிவுகளை இட முடிவில்லை. இருப்பினும் எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் எனது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்சுக்கு நன்றி, இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நடிப்பில் முழு கவனம் செலுத்தி வரும் அவர், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 99 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றிருப்பது வியப்பை ஏற்படுத்தி வருகிறது. அவருக்கு அவரது ரசிகர்கள் உள்பட பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
newstm.in

