ஆசிரியை திட்டியதால் வேதனை.. 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை..!
ஆசிரியை திட்டியதால் வேதனை.. 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை..!

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை லட்சுமி நகரைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகள் ரம்யா (14). இவர், திசையன்விளையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் பள்ளியில் ஆங்கில தேர்வு நடந்தது. அப்போது, ஆசிரியை ஒருவர் மாணவி ரம்யாவை திட்டியதாக கூறப்படுகிறது. மற்ற மாணவர்கள் முன்னால் திட்டியதால் மாணவி ரம்யா மனவேதனை அடைந்துள்ளார்.
வீட்டிற்கு சென்றதும் பள்ளியில் நடந்த சம்பவங்களை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். மனவேதனை இருந்த ரம்யா, அன்று இரவு வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ரம்யாவின் தந்தை பெருமாள் திசையன்விளை போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story

