நாசா விண்வெளி ஆய்வகத்துக்கு செல்லும் நாமக்கல் 9ம் வகுப்பு மாணவி..!
நாமக்கல் மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவி அபிநயா நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் அறிவியல் போட்டியில் வெற்றி பெற்று, நாசா செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார்.இதை பாராட்டும் விதமாக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து மாணவி அபிநயாவுக்கு ரூ. 2 லட்சம் ஊக்கதொகை வழங்கிட முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவி அபிநயா நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் அறிவியல் போட்டியில் வெற்றி பெற்று, நாசா செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
அமெரிக்காவிலுள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்தை சுற்றிப் பார்க்க விரும்பும் மாணவர்களை தேர்வு செய்யும் நோக்குடன், அமெரிக்கா மற்றும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்கள் இணைந்து ஆண்டுதோறும் அறிவியில் தேர்வுகளை நடத்தி வருகின்றன.முன்னதாக, இந்த தேர்வில் பங்கேற்று வெற்றிபெற்ற பல்வேறு தமிழக மாணவ, மாணவிகளும் நாசாவுக்கு சென்று திரும்பியுள்ளனர். இந்தாண்டுக்காக நடத்தப்பட்ட தேர்வில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி அபிநயா வெற்றி பெற்றுள்ளார்.

இதையடுத்து விரைவில் அவர் நாசா விண்வெளி ஆய்வு அமையத்திற்கு செல்லவுள்ளார். இதை பாராட்டும் விதமாக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து மாணவி அபிநயாவுக்கு ரூ. 2 லட்சம் ஊக்கதொகை வழங்கிட முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்ல தேர்வாகியுள்ள 9ம் வகுப்பு மாணவி அபிநயா, கல்வியில் சிறந்து விளங்கவும், விண்வெளித்துறையில் சாதனைகள் படைக்க வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
newstm.in

