தவறுதலாக எல்லைக்குள் நுழைந்த 3 வயது பாக். சிறுவனை மீட்ட இந்திய ராணுவ வீரர்கள்
தவறுதலாக எல்லைக்குள் நுழைந்த 3 வயது பாக். சிறுவனை மீட்ட இந்திய ராணுவ வீரர்கள்

இந்தியா - பாகிஸ்தான் தான் இடையே உள்ள பிரச்சினை என்பது உலகம் அறிந்தது. அதேவேளையில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இந்தியாவுக்கு ஊடுருவி தாக்குதல் நடத்த முயற்சித்து அவ்வப்போது அத்துமீறி வருகிறார்கள். இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போக்கு பல ஆண்டுகளாக நீடித்துக்கொண்டே தான் இருக்கிறது.
இதனால் எல்லையில் எப்போதும் ஒருவித பதற்றமான சூழலே நீடிக்கிறது. இந்த நிலையில், எல்லையில் பாகிஸ்தான் சிறுவனை இந்திய ராணுவ வீரர்கள் மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூர் செக்டார் பகுதியில் நேற்று இரவு 7 மணியிளவில் எல்லை வேலிக்கு அருகில் நின்றபடி குழந்தை அழுதுகொண்டிருந்தது. இதனை எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் கவனித்தனர்.

அதைத் தொடர்ந்து, எல்லைப் பாதுகாப்பு படை களத் தளபதி, இது தொடர்பாக பாகிஸ்தான் ரேஞ்சர்களுடன் உடனடியாக பாகிஸ்தானுடன் கொடி சந்திப்பை நடத்த முன்றார். இதனால் குழந்தையைத் திருப்பி ஒப்படைக்க முடியும் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து, சிறிது நேரத்தில் குழந்தை அவரது தந்தை முன்னிலையில் ரேஞ்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் ரேஞ்சர்களும் குழந்தையை அழைத்துச்சென்றனர். அப்போது அக்குழந்தை தவறுதலாக எல்லைக்கோட்டு அருகே வந்தது தெரியவந்தது.
newstm.in

