Theme Check

பாலியல் தொல்லை கொடுத்து 3 வயது குழந்தை கொலை!!

பாலியல் தொல்லை கொடுத்து 3 வயது குழந்தை கொலை!!

பாலியல் தொல்லை கொடுத்து 3 வயது குழந்தை கொலை!!
X

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த திவ்யா என்ற பெண் கடந்த ஒன்றாம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே தனது கள்ளக்காதலுடன் மூன்று வயது கைக்குழந்தையை அழைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்றார்.

அப்போது குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அருகே உள்ள கொடும்பாளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளித்து பின் திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு குழந்தை உயிரிழந்தது.

ஆனால் குழந்தையின் சடலத்தை கூட பெறாமல் திவ்யா மற்றும் அவரது கள்ளக்காதலன் ஜெகன் அங்கிருந்து தப்பி ஓடியதால் சந்தேகம் அடைந்த மருத்துவமனை நிர்வாகம் குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் புகார் அளித்தது.

Abuse

விசாரணையில் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விராலிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

அதன் அடிப்படையில் குழந்தையின் தாயார் திவ்யா,கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த அவரது கள்ளக்காதலன் ஜெகன், அவரின் நண்பர் பழனியப்பன் ஆகிய மூவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

newstm.in

Next Story
Share it