டிராக்டர் மோதியதில் 7 மாத கர்ப்பிணி, ஒன்றரை வயது குழந்தை பரிதாப பலி!

டிராக்டர் மோதியதில் 7 மாத கர்ப்பிணி, ஒன்றரை வயது குழந்தை பரிதாப பலி!

டிராக்டர் மோதியதில் 7 மாத கர்ப்பிணி, ஒன்றரை வயது குழந்தை பரிதாப பலி!
X

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தானகவுண்டம்புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை (30). இவருக்கு மணிமேகலை (25) என்ற மனைவியும், ஒன்றரை வயதில் துரைமணி என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.

accident

இந்த நிலையில், அவரது ஏழு மாத கர்ப்பிணி மனைவி மணிமேகலை மற்றும் குழந்தை துரைமணி ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்காக சென்று கொண்டிருந்தார்.

அப்போது முத்தனூர் அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தின் பின்னால் வந்த டிராக்டர் பலமாக மோதி ஏற்பட்ட விபத்தில் ராஜதுரை படுகாயமடைந்தார். மேலும் ஒன்றரை வயது குழந்தையான துரைமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயரிழந்தது.

dead

அவரது மனைவி மணிமேகலை உயிருக்கு போராடிய நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே உயரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பாளையம் துணை காவல் ஆய்வாளர் லதா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

Next Story
Share it