Theme Check

சற்று ஆறுதல்.. தமிழகத்தில் இன்று குறைந்த கொரோனா பாதிப்பு !!

சற்று ஆறுதல்.. தமிழகத்தில் இன்று குறைந்த கொரோனா பாதிப்பு !!

சற்று ஆறுதல்.. தமிழகத்தில் இன்று குறைந்த கொரோனா பாதிப்பு !!
X

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. எனினும் பெரியளவில் குறையவில்லை என்பதால் ஒருவித அச்சம் நிலவுகிறது.

தமிழகத்தில் நேற்று ஒருநாள் பாதிப்பு 2,672ஆக பதிவானது. இன்று பாதிப்பு 2,654 ஆக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.

ad

அதன்படி, தமிழகத்தில் இன்று பாதிப்பு 2,654 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 85 ஆயிரத்து 429 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,542 கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு இல்லை.

தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 30,545- ஆகும். சென்னையில் இன்று 1,066 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 15,616 ஆக உள்ளது.


newstm.in

Next Story
Share it